Tuesday , November 21 2017
Home / முதன்மை செய்திகள்

முதன்மை செய்திகள்

முதன்மை செய்திகள்

முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி விரதம்

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் முருகப் பெருமான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. சூரனுடன் போரிட்ட கந்தப் பெருமான் அவனை வதம் செய்த நாளே கந்த சஷ்டியாகும். சஷ்டி என்றால் 6. ஆறு நாட்கள் விரதம் இருந்து கந்தப் பெருமானை வழிபடுவதே சஷ்டி விரதம். 6 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் கந்த சஷ்டி அன்று மட்டுமாவது விரதம் இருக்கலாம். சஷ்டியன்று விரதம் இருந்து சாமி தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும். …

Read More »

ஆப்பிளின் விலை மதிப்புமிக்க ஸ்மார்ட்ஃபோன்

எட்ஜ் டூ எட்ஜ்’ திரைவசதி மற்றும் ஹோம் (முகப்பு) பட்டனே இல்லாத தனது உயர்ரக ஸ்மார்ட்ஃபோனை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.   ஐபோன் X – என்பது இங்கு எண் பத்தை குறிக்கிறது. மேலும், இது தனது உரிமையாளரை கண்டறியும் வகையிலான பழைய கைரேகை அடிப்படையிலான சரிபார்ப்பு முறையை விடுத்து தற்போது முக அடையாள அமைப்பை முறையை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு FaceID என்று பெயரிட்டுள்ள ஆப்பிள் நிறுவனம், …

Read More »

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்!

விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணிமாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பிடித்து வைத்தால் பிள்ளையார் என விநாயகரை போற்றுவார்கள். விநாயகர் அவ்வளவு எளிமையானவர். “மஞ்சளிலே செய்யினும், மண்ணினாலே செய்யினும் அஞ்செழுத்து மந்திரத்தை, நெஞ்சில் நாட்டும்பிள்ளையார் ” எனும் வரிகள் அவரின் எளிமையை விளக்குவதாகும். மஞ்சளில், மண்ணில், அரிசி மாவில், காகிதக்கூழில் என கூறிக்கொண்டே போகலாம். அவ்வளவு ஏன் ? பசுஞ்சாணத்தை பிள்ளையாராக வைத்து அருகம்புல் சாற்றிவிட்டால் ஓடி வந்துவிடுவார் நம் குறை …

Read More »

பிரிட்டனில் `தொங்கு நாடாளுமன்றம்`

பிரிட்டனில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத தொங்கு நாடாளுமன்றம் உருவாகியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது பற்றி, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடத்தவிருக்கும் பிரெக்ஸிட் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக தனது பெரும்பான்மையை அதிகரித்துக்கொள்ள தேர்தலை முன்கூட்டியே நடத்த உத்தரவிட்ட , பிரதமர் தெரீசா மே அவர் முயற்சியில் தோல்வியடைந்தார். ஏறக்குறைய எல்லா முடிவுகளும் தற்போது வெளியாகியுள்ள நிலையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி, தொகுதிகள் பலவற்றை இழந்திருக்கிறது, …

Read More »

சாம்பியன்ஸ் டிராபி: இலங்கையிடம் இந்தியா தோற்றது.

லண்டன்  ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரோகித் ஷர்மா, ஷிகார் தவான் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி 138 ரன் சேர்த்து வலுவான தொடக்கத்தை தந்த நிலையில், ரோகித் (78 ரன், 79 பந்து) மலிங்கா வேகத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் கோஹ்லி, பிரதீப் பந்தில் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். யுவராஜ் சிங் …

Read More »

சீனா தயாரித்த முதல் பயணியர் விமானத்தின் வெள்ளோட்டம்

சீனாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது பெரிய பயணியர் விமானம், அதனுடைய முதலாவது பயணத்தை மேற்கொண்டுள்ளது. போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களுக்கு மாபெரும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய விமானச் சந்தையில் நுழைவதற்கு சீனாவின் அதிகரித்துள்ள அபிலாஷையின் முக்கிய அடையாளமாக சி919 விமானம் பார்க்கப்படுகிறது. BBC Tamil

Read More »

பிரிட்டனில் பொது தேர்தல்

பிரிட்டனில் ஜூன் 8 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் பொது தேர்தலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.   பிரிட்டனில் பொது தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் தெரீசா மே நேற்று அறிவித்தார்; அதற்கு இன்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவிற்கு 522 உறுப்பினர்கள் ஆதரவும், 13 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். தொழிற்கட்சி மற்றும் லிபரல் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால், மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேற்பட்ட ஆதரவுகள் …

Read More »

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான கடிதத்தில் தெரீசா மே கையெழுத்து

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான கடிதத்தில், பிரதமர் தெரீசா மே கையெழுத்திட்டுள்ளதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான நடவடிக்கை முறையாக துவங்கியுள்ளது. லிஸ்பன் ஒப்பந்தத்தின் சட்டவிதி 50-இன் கீழ் வழங்கப்பட்ட இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு, இன்று புதன்கிழமை மாலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்கிடம் அளிக்கப்படும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் நடைமுறையை தொடங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் இது தொடர்பாக நாடாளுமன்ற அவையில் பிரதமர் …

Read More »

புதிய தொழில்நுட்பத்துடன் நோக்கியா 3310

நோக்கியாவின் 3310 வகை அலைபேசி மீண்டும் சந்தையில் அறிமுகமாகிறது; அறிமுகமான 17 வருடங்களுக்கு பின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இந்த மறு அறிமுகம் நடைபெறுகிறது. நோக்கியாவின் பெயர்போன பாம்பு விளையாட்டும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் சேர்ந்து நோக்கியா ஸ்மார்ட்ஃபோன்களும் அறிமுகமாகின்றன. இந்த புதிய நோக்கியா வகை அலைபேசிகள் சந்தையில் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More »

தைப்பூசம் விரத வழிபாடு தோன்றிய வரலாறு

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையட்டியோ (ஓரிரு நாள் முன்பின்) தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டு 9-ந்தேதி (வியாழக்கிழமை) தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் …

Read More »