Saturday , February 24 2018
Home / முதன்மை செய்திகள் (page 3)

முதன்மை செய்திகள்

முதன்மை செய்திகள்

பிரதமர் ஹொங்கொங் பயணம்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று வியாழக்கிழமை (03) காலை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக ஆசிய பசுபிக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஹொங்கொங் பயணித்துள்ளார்.

Read More »

தண்ணீரை எப்போதெல்லாம் குடிக்கலாம், குடிக்க கூடாது என்று தெரியுமா?

தண்ணீர் நமது உடலை சீரான முறையில் இயக்க முக்கியமான பொருளாக திகழ்கிறது. சரியான இடைவேளையில் நீரை உட்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் உடலில் நீர்வறட்சி ஏற்பட்டால் உடல் பாகங்களின் செயல் திறனில் குறைபாடு ஏற்பட துவங்கும், முக்கியமாக மூளையில். சில நேரங்களில் நீரை பருகுவது தவறானது என்றும் கூறப்படுகிறது. காலை எழுந்ததும் நீங்கள் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் தண்ணீர் பருக வேண்டியது அவசியம். இது, உங்கள் உடலை சுத்திகரிப்பு செய்ய உதவுகிறது. எலுமிச்சை அல்லது …

Read More »

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கற்றச் செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கற்றச் செயற்பாடுகள், இன்று புதன்கிழமை (02) முதல் ஆரம்பமாகியுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம், 21ஆம் திகதி அதிகாலை, கொக்குவில், குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஸன் (வயது 24) ஆகிய மாணவர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விச் …

Read More »

பிரிட்டனில் தனது முன்னணி மாடல் கார்களின் இரு பதிப்புகளை உற்பத்தி செய்ய நிஸான் திட்டம்

ஜப்பானிய கார் உற்பத்தியாளரான நிஸான், தனது நிறுவனத்தின் முன்னணி இரு மாடல்களின் புதிய பதிப்புகளை பிரிட்டனில் உற்பத்தி செய்ய உள்ளதாக முடிவெடுத்துள்ளது. பிரிட்டனில் தனது முன்னணி மாடல் கார்களின் இரு பதிப்புகளை உற்பத்தி செய்ய நிஸான் திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வாக்களித்ததை தொடர்ந்து, பிரிட்டன் தொழிற்துறைக்காக எடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய முதல் ஒப்பந்தம் இது. நிஸான் நிறுவனத்தின் இந்த முடிவு குறைந்தது, 7000 பணியிடங்களை பாதுகாக்கும். சண்டெர்லாண்டில் உள்ள …

Read More »

தொடரை வென்றது இங்கிலாந்து.

பங்களாதேஷ் அணிக்கும் இங்கிலாந்து அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, அத்தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.  சிட்டகொங்கில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பங்களாதேஷ் அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 277 ஓட்டங்களைப் பெற்றது.  துடுப்பாட்டத்தில் முஷ்பிக்கூர் ரஹீம் ஆட்டமிழக்காமல் 67 (62), சபீர் ரஹ்மான் 49 (46), இம்ருல் கைய்ஸ் 46 …

Read More »

ஜனாதிபதி நாடு திரும்பினார்.

கடந்த 7ஆம் திகதியன்று தாய்லாந்துக்குப் பயணமான ஜனாதிபதி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினுடாக நேற்று இரவு நாட்டை வந்தடைந்தார் என, ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்தது. தாய்லாந்துக்கான நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Read More »

ஐ.நாவின் அடுத்த செயலாளர் நாயகம் தெரிவானார்.

போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டரெஸ், ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த செயலாளர் நாயகமாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். தற்போதைய, ஐ.நா. பொதுச் செயலாளரான பான் கி மூனின் பதவிக் காலம் எதிர்வரும் டிசெம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. அதன்பின்னர், புதிய செயலாளர் பதவியேற்பார்.

Read More »

பிரிட்டனின் பவுண்டின் மதிப்பு சரிந்துள்ளது.

ஆசிய சந்தைகளில், ”பிளாஷ் கிராஷ்”(flash crash) என்று அறியப்படும், பங்கு சந்தையில் தி்டீரென ஏற்படும் பெரிய வீழ்ச்சியால், பிரிட்டனின் நாணயமான பவுண்டின் மதிப்பு சரிந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக வாக்களித்ததற்குப் பிறகு பவுண்டு மதிப்பு குறைந்து வரும் போக்கில், இதுதான் மிகப் பெரிய சரிவாகும். ஒரு கட்டத்தில், டாலரின் மதிப்பிற்கு எதிராக, பவுண்டின் மதிப்பு கிட்டத்தட்ட 10 சதவீதம் என்ற அளவில் வீழ்ச்சி அடைந்தது. சரிவில் இருந்து …

Read More »

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த தகவல்களைக் கோரிய மனு தள்ளுபடி

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த தகவல்களை வெளியிட வேண்டும், தற்காலிக முதலமைச்சரை நியமிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. சமூக ஆர்வலர் ட்ராஃபிக் ராமசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வரும் நிலையில், அவரது உடல் நலம் …

Read More »

GooglePixel

    வானிலை போலவே, டெக்னாலஜி உலகமும் நிலையானது கிடையாது. அதற்கேற்ப நேற்று கூகுள் புதிய அறிவிப்புகள் சிலவற்றை வெளியிட்டுள்ளது.  அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கூகுள் நிறுவனம் தங்களின் புதிய ஸ்மார்ட்போன்களான பிக்சல் மற்றும் பிக்சல் XL, புதிய Google Home என்னும் ஸ்மார்ட் ஸ்பீக்கர் , கூகுள் அசிஸ்டன்ட், புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட், WiFi ரௌட்டர் மற்றும் புதிய கிரோம்காஸ்ட் அல்ட்ரா என்னும் …

Read More »