Tuesday , November 21 2017
Home / முதன்மை செய்திகள் (page 4)

முதன்மை செய்திகள்

முதன்மை செய்திகள்

மிஹின் லங்கா – ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும்

மிஹின் லங்கா விமான நிறுவனத்தின் நடவடிக்கைகளை எதிர்வரும் 31ஆம் திகதி முதல் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் பொறுப்பேற்கவுள்ளது. அதற்கமைய தொடர்ந்து மிஹின் லங்கா விமான நிறுவனம் ஊடாக மேற்கொள்ளவுள்ள விமான பயணங்கள் அனைத்தும் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளன. தற்போது, மிஹின் லங்கா விமான சேவை ஊடாக பஹ்ரைன், மதுரை, டாக்கா, மஸ்கட், மாலே, சீசெல்ஸ், புத்தகயா உள்ளிட்ட இடங்களுக்கு விமான சேவைகள் இடம்பெற்று வருகின்றன. …

Read More »

பிரிட்டன் பவுண்டின் மதிப்பு 31 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சத்திற்கு மத்தியில், டாலருக்கு நிகரான பிரிட்டன் பவுண்டின் மதிப்பு, 31 வருடங்களில் இல்லாத அளவு கடுமையாக சரிந்துள்ளது. இன்று காலை நடந்த வர்த்தகத்தில், 1985 ஆம் ஆண்டிலிருந்து கண்டிராத சரிவாக டாலருக்கு நிகரான பவுண்டின் மதிப்பு 0.5 சதவீதத்தை அடைந்தது. மார்ச் மாதத்தின் கடைசியில், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான நடைமுறைகள் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் …

Read More »

இந்தியா உள்பட 4 நாடுகள் சார்க் உச்சிமாநாட்டில் பங்கேற்பதிலிருந்து விலகல்

இந்தியா, வங்கதேசம், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடக்கவுள்ள எதிர்வரும் தெற்காசிய (சார்க்) உச்சிமாநாட்டில் பங்கேற்பதிலிருந்து விலகியுள்ளன. இந்த பிராந்தியக் குழுவின் தற்போதைய தலைமைப் பொறுப்பில் உள்ள நேபாளத்தின் அதிகாரிகள், தாங்கள் இன்னமும் இந்த கூட்டம் திட்டமிட்டப்படி நடக்கும் என்று நமப்புவதாக தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமையன்று ‘ பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் தீவிரவாதம்’ ஆகிய இரண்டு அம்சங்களும் ஒன்றாக இருக்க முடியாது என்று தெரிவித்த இந்தியா, இந்த …

Read More »

ஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை ரத்து?

ஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ரத்து செய்யப்படும் நிலை உருவாகி உள்ளது. இது இலங்கை அரசாங்கத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஹமாஸ் அமைப்புகளின் பெயர்களை நீடிக்க உத்தரவிட வேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மனு. ஆனால் இந்த கோரிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரிட்டனைச் சேர்ந்த மூத்த …

Read More »

உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சூர்யாவின் 24 படம்

விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘24’ படம் சில மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்தது. இந்த படத்தை ‘2டி’ என்டர்டெயின்மென்ட் படநிறுவனம் தயாரித்து இருந்தது. இதில் சூர்யா, தந்தை-மகன், வில்லன் ஆகிய 3 வேடங்களில் நடித்து இருந்தார். சீனாவில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவில் திரையிட ‘24’ படம் அனுப்பிவைக்கப்பட்டது. இந்த விழாவில், மொத்தம் 675 படங்கள் திரையிடப்பட்டன. இதில், ‘24’ திரைப்படம் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த படம் …

Read More »

சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய Google இன் Allo App

பல குறுந்தகவல் செயலிகள் மத்தியில் புதிதாக Allo App என்ற செயலி அறிமுகமாகின்றது.  தங்களின் கையடக்கத்தொலைபேசி இலக்கத்தினை கொண்டு இதற்கு பதிவு செய்தால் கூகுள் கணக்குடன் இணைத்து மற்ற குறுந்தகவல் செயலி வழங்கும் அனைத்து அம்சங்களையும் Allo App வழங்குகின்றது. கூகுளின் குறுந்தகவல் அனுப்பும் இந்த Allo App, இப்போதே பதிவிறக்குவது மிகவும் மதிப்புள்ளதாகும். Facebook, Messenger உடன் bots-ஐ ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், Facebook விட மிக …

Read More »

கிளிநொச்சி சந்தை தீ விபத்தில் பல கோடி ரூபாய் பொருள் எரிந்து நாசம்

கிளிநொச்சியின் சந்தைப் பகுதியில் வெள்ளிக்கிழமை முன்னிரவு எட்டு மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 75 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. நூறு கடைகளுக்கு மேலாக தீயால் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்றிரவு ஏற்பட்ட இந்தத் தீயை இன்று அதிகாலை 5 மணியளவில்தான் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தீயணைக்கும் வாகன வசதிகள் இல்லாத காரணத்தால் பல சிரமங்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயை அணைப்பதில் ஈடுபட்ட 5 படையினருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சை பெற்று …

Read More »

விஜய்சேதுபதி உருக்கம்

காவிரி நீர் விவகாரத்தில், சாதாரண பொதுமக்களை யாரும் தாக்க வேண்டாம் என கன்னட அமைப்பினருக்கு நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்துள்ளார். காவிரி நிர் தொடர்பாக எழுந்த பிரச்சனையில்,  கன்னட அமைப்பினர், தமிழர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்கள் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்படுகிறது. கர்நாடக எல்லையில் சென்ற தமிழகத்தை சேர்ந்த ஒரு வாகனத்தை வழிமறித்த கும்பல், அவர் முதியவர் என்றும் பாராமல் கன்னடம் பேசக்கூறி கன்னத்தில் அடித்தனர். …

Read More »

ஓணம் பண்டிகை

கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஓணம் ஆகும். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை, கேரளாவின் அறுவடை திருநாள் என அழைக்கிறார்கள். கொல்லவர்ஷம் எனும் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்களாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆவணி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும் வாமணன் …

Read More »

இலங்கைக்கான விமான பயணங்களில் தடை ஏற்படக்கூடும்

தாம் ஆரம்பித்துள்ள சட்டப்படி வேலை செய்தல் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக எதிர்வரும் காலத்தில் இலங்கைக்கான விமான பயணங்களில் தடை ஏற்படக்கூடும் என ஸ்ரீலங்கன் விமான அமைப்பு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனமோ அல்லது அரசாங்கமோ இதுவரை தமது கோரிக்கைகளுக்கு பதில் வழங்காமையினால் எமது போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அந்த அமைப்பின் செயலாளர் அநுர அபேயசேகர எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்துள்ளார். அண்மையில் ஜெர்மனி பிராங்போட் விமானநிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்திற்கு …

Read More »