Tuesday , November 21 2017
Home / விளையாட்டு

விளையாட்டு

விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபி: இலங்கையிடம் இந்தியா தோற்றது.

லண்டன்  ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரோகித் ஷர்மா, ஷிகார் தவான் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி 138 ரன் சேர்த்து வலுவான தொடக்கத்தை தந்த நிலையில், ரோகித் (78 ரன், 79 பந்து) மலிங்கா வேகத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் கோஹ்லி, பிரதீப் பந்தில் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். யுவராஜ் சிங் …

Read More »

தொடரை வென்றது இங்கிலாந்து.

பங்களாதேஷ் அணிக்கும் இங்கிலாந்து அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, அத்தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.  சிட்டகொங்கில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பங்களாதேஷ் அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 277 ஓட்டங்களைப் பெற்றது.  துடுப்பாட்டத்தில் முஷ்பிக்கூர் ரஹீம் ஆட்டமிழக்காமல் 67 (62), சபீர் ரஹ்மான் 49 (46), இம்ருல் கைய்ஸ் 46 …

Read More »

மரியா ஷரபோவா தடைக் காலம் 15 மாதங்களாக குறைப்பு !

பிரபல டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவாக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக் காலத்தை 15 மாதங்களாக குறைத்து விளையாட்டுக்கான சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. அப்போது வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனை நடைபெற்றது. மரியா ஷரபோவாவிடம் இருந்து பெறப்பட்ட மாதிரியை சோதனை செய்தபோது அவர் மெல்டோனியம் என்ற தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் 2 ஆண்டுகள் டென்னிஸ் விளையாட …

Read More »

நியூசிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. செப்டம்பர் 22 ஆம் தேதி துவங்கும் இந்த சுற்றுப்பயணம் அக்டோபர் 29 ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான இந்த டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:- “ …

Read More »