Tuesday , November 21 2017
Home / உலகம்

உலகம்

உலகம்

முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி விரதம்

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் முருகப் பெருமான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. சூரனுடன் போரிட்ட கந்தப் பெருமான் அவனை வதம் செய்த நாளே கந்த சஷ்டியாகும். சஷ்டி என்றால் 6. ஆறு நாட்கள் விரதம் இருந்து கந்தப் பெருமானை வழிபடுவதே சஷ்டி விரதம். 6 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் கந்த சஷ்டி அன்று மட்டுமாவது விரதம் இருக்கலாம். சஷ்டியன்று விரதம் இருந்து சாமி தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும். …

Read More »

ஆப்பிளின் விலை மதிப்புமிக்க ஸ்மார்ட்ஃபோன்

எட்ஜ் டூ எட்ஜ்’ திரைவசதி மற்றும் ஹோம் (முகப்பு) பட்டனே இல்லாத தனது உயர்ரக ஸ்மார்ட்ஃபோனை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.   ஐபோன் X – என்பது இங்கு எண் பத்தை குறிக்கிறது. மேலும், இது தனது உரிமையாளரை கண்டறியும் வகையிலான பழைய கைரேகை அடிப்படையிலான சரிபார்ப்பு முறையை விடுத்து தற்போது முக அடையாள அமைப்பை முறையை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு FaceID என்று பெயரிட்டுள்ள ஆப்பிள் நிறுவனம், …

Read More »

சீனா தயாரித்த முதல் பயணியர் விமானத்தின் வெள்ளோட்டம்

சீனாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது பெரிய பயணியர் விமானம், அதனுடைய முதலாவது பயணத்தை மேற்கொண்டுள்ளது. போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களுக்கு மாபெரும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய விமானச் சந்தையில் நுழைவதற்கு சீனாவின் அதிகரித்துள்ள அபிலாஷையின் முக்கிய அடையாளமாக சி919 விமானம் பார்க்கப்படுகிறது. BBC Tamil

Read More »

பிரிட்டனில் பொது தேர்தல்

பிரிட்டனில் ஜூன் 8 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் பொது தேர்தலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.   பிரிட்டனில் பொது தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் தெரீசா மே நேற்று அறிவித்தார்; அதற்கு இன்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவிற்கு 522 உறுப்பினர்கள் ஆதரவும், 13 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். தொழிற்கட்சி மற்றும் லிபரல் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால், மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேற்பட்ட ஆதரவுகள் …

Read More »

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான கடிதத்தில் தெரீசா மே கையெழுத்து

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான கடிதத்தில், பிரதமர் தெரீசா மே கையெழுத்திட்டுள்ளதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான நடவடிக்கை முறையாக துவங்கியுள்ளது. லிஸ்பன் ஒப்பந்தத்தின் சட்டவிதி 50-இன் கீழ் வழங்கப்பட்ட இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு, இன்று புதன்கிழமை மாலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்கிடம் அளிக்கப்படும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் நடைமுறையை தொடங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் இது தொடர்பாக நாடாளுமன்ற அவையில் பிரதமர் …

Read More »

தைப்பூசம் விரத வழிபாடு தோன்றிய வரலாறு

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையட்டியோ (ஓரிரு நாள் முன்பின்) தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டு 9-ந்தேதி (வியாழக்கிழமை) தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் …

Read More »

வென்றார் டொனால்ட் டிரம்ப்

ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிலரி கிளிண்டனை அதிர்ச்சிகரமான முறையில் தோல்வியடைச் செய்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 45-வது அதிபராகி உள்ளார் என்று ஏபி செய்தி முகமை தகவல்கள் தெரிவித்துள்ளன. பல மாதங்களாக நடந்த பிரச்சாரத்தில் ஹிலரிக்கு ஆதரவாக தென்பட்ட பல முக்கிய ஊசல் நிலை மாநிலங்களில் பலவற்றை வென்றதன் மூலம் குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி உறுதியானது. ஃபுளோரிடா, ஒஹையோ, வடக்கு கரோலினா போன்ற கடும் போட்டி …

Read More »

இந்தியாவின் புதிய ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம்

இந்தியாவில் இன்று முதல் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோதி அறிவித்துள்ளார். இதனை அடுத்து, மத்திய ரிசர்வ் வங்கி புதிய மாதிரியில் வெளியிடவுள்ள ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. BBC

Read More »

கேலக்ஸி நோட் செவன் திறன்பேசியின் விற்பனை, பரிமாற்றத்தை நிறுத்த சாம்சங் வலியுறுத்தல்

தென் கொரிய மின்னணு நிறுவனமான சாம்சங், அதன் கேலக்ஸி நோட் செவன் திறன்பேசியின் (Galaxy Note Seven smartphone) விற்பனை மற்றும் பரிமாற்றத்தை நிறுத்துமாறு, உலகம் முழுவதும் உள்ள தனது தொழில் கூட்டாளிகளை வலியுறுத்தியுள்ளது. பேட்டரியில் உள்ள பிரச்சனைகள் காரணமாக அந்த அலைபேசி தீ பிடிக்கும் நிகழ்வுகள் ஏற்படுவதாகத் தொடர்ந்து கூறப்படுவதாலும், தீ பிடிக்கும் பிரச்சனை காரணமாகக் கொடுக்கப்பட்ட மாற்று அலைபேசிகள் சிலவற்றிலும் இது தொடர்வதாலும், சாம்சங் இந்த முடிவை …

Read More »

மரியா ஷரபோவா தடைக் காலம் 15 மாதங்களாக குறைப்பு !

பிரபல டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவாக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக் காலத்தை 15 மாதங்களாக குறைத்து விளையாட்டுக்கான சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. அப்போது வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனை நடைபெற்றது. மரியா ஷரபோவாவிடம் இருந்து பெறப்பட்ட மாதிரியை சோதனை செய்தபோது அவர் மெல்டோனியம் என்ற தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் 2 ஆண்டுகள் டென்னிஸ் விளையாட …

Read More »