Saturday , February 24 2018
Home / உலகம் (page 2)

உலகம்

உலகம்

மரியா ஷரபோவா தடைக் காலம் 15 மாதங்களாக குறைப்பு !

பிரபல டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவாக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக் காலத்தை 15 மாதங்களாக குறைத்து விளையாட்டுக்கான சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. அப்போது வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனை நடைபெற்றது. மரியா ஷரபோவாவிடம் இருந்து பெறப்பட்ட மாதிரியை சோதனை செய்தபோது அவர் மெல்டோனியம் என்ற தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் 2 ஆண்டுகள் டென்னிஸ் விளையாட …

Read More »

‘வலம்புரி’ கிடைத்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளால்,1998ஆம் ஆண்டு தற்கொலைத் தாக்குதலுக்கு இலக்காகி, பருத்தித்துறைக் கடலில் மூழ்கிய, கடற்படையினருக்குச் சொந்தமான ‘வலம்புரி’ என்ற கப்பல்,கடற்படை நீர்மூழ்கி வீரர்களால் திங்கட்கிழமை (03) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட குறித்த கப்பலில், கடற்படையினர் 20 பேர் பயணித்துக்கொண்டிருந்த போதே, விடுதலை புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு இலக்கானது. இதன்போது, அதில் அவர்கள் அனைவரும் உயிரிழந்திருந்தனர். யுத்தம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, குறித்த கப்பலை தேடுவதில் கடற்படையினர் …

Read More »

மிஹின் லங்கா – ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும்

மிஹின் லங்கா விமான நிறுவனத்தின் நடவடிக்கைகளை எதிர்வரும் 31ஆம் திகதி முதல் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் பொறுப்பேற்கவுள்ளது. அதற்கமைய தொடர்ந்து மிஹின் லங்கா விமான நிறுவனம் ஊடாக மேற்கொள்ளவுள்ள விமான பயணங்கள் அனைத்தும் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளன. தற்போது, மிஹின் லங்கா விமான சேவை ஊடாக பஹ்ரைன், மதுரை, டாக்கா, மஸ்கட், மாலே, சீசெல்ஸ், புத்தகயா உள்ளிட்ட இடங்களுக்கு விமான சேவைகள் இடம்பெற்று வருகின்றன. …

Read More »

பிரிட்டன் பவுண்டின் மதிப்பு 31 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சத்திற்கு மத்தியில், டாலருக்கு நிகரான பிரிட்டன் பவுண்டின் மதிப்பு, 31 வருடங்களில் இல்லாத அளவு கடுமையாக சரிந்துள்ளது. இன்று காலை நடந்த வர்த்தகத்தில், 1985 ஆம் ஆண்டிலிருந்து கண்டிராத சரிவாக டாலருக்கு நிகரான பவுண்டின் மதிப்பு 0.5 சதவீதத்தை அடைந்தது. மார்ச் மாதத்தின் கடைசியில், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான நடைமுறைகள் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் …

Read More »

இந்தியா உள்பட 4 நாடுகள் சார்க் உச்சிமாநாட்டில் பங்கேற்பதிலிருந்து விலகல்

இந்தியா, வங்கதேசம், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடக்கவுள்ள எதிர்வரும் தெற்காசிய (சார்க்) உச்சிமாநாட்டில் பங்கேற்பதிலிருந்து விலகியுள்ளன. இந்த பிராந்தியக் குழுவின் தற்போதைய தலைமைப் பொறுப்பில் உள்ள நேபாளத்தின் அதிகாரிகள், தாங்கள் இன்னமும் இந்த கூட்டம் திட்டமிட்டப்படி நடக்கும் என்று நமப்புவதாக தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமையன்று ‘ பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் தீவிரவாதம்’ ஆகிய இரண்டு அம்சங்களும் ஒன்றாக இருக்க முடியாது என்று தெரிவித்த இந்தியா, இந்த …

Read More »

ஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை ரத்து?

ஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ரத்து செய்யப்படும் நிலை உருவாகி உள்ளது. இது இலங்கை அரசாங்கத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஹமாஸ் அமைப்புகளின் பெயர்களை நீடிக்க உத்தரவிட வேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மனு. ஆனால் இந்த கோரிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரிட்டனைச் சேர்ந்த மூத்த …

Read More »

சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய Google இன் Allo App

பல குறுந்தகவல் செயலிகள் மத்தியில் புதிதாக Allo App என்ற செயலி அறிமுகமாகின்றது.  தங்களின் கையடக்கத்தொலைபேசி இலக்கத்தினை கொண்டு இதற்கு பதிவு செய்தால் கூகுள் கணக்குடன் இணைத்து மற்ற குறுந்தகவல் செயலி வழங்கும் அனைத்து அம்சங்களையும் Allo App வழங்குகின்றது. கூகுளின் குறுந்தகவல் அனுப்பும் இந்த Allo App, இப்போதே பதிவிறக்குவது மிகவும் மதிப்புள்ளதாகும். Facebook, Messenger உடன் bots-ஐ ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், Facebook விட மிக …

Read More »

கிளிநொச்சி சந்தை தீ விபத்தில் பல கோடி ரூபாய் பொருள் எரிந்து நாசம்

கிளிநொச்சியின் சந்தைப் பகுதியில் வெள்ளிக்கிழமை முன்னிரவு எட்டு மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 75 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. நூறு கடைகளுக்கு மேலாக தீயால் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்றிரவு ஏற்பட்ட இந்தத் தீயை இன்று அதிகாலை 5 மணியளவில்தான் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தீயணைக்கும் வாகன வசதிகள் இல்லாத காரணத்தால் பல சிரமங்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயை அணைப்பதில் ஈடுபட்ட 5 படையினருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சை பெற்று …

Read More »

விஜய்சேதுபதி உருக்கம்

காவிரி நீர் விவகாரத்தில், சாதாரண பொதுமக்களை யாரும் தாக்க வேண்டாம் என கன்னட அமைப்பினருக்கு நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்துள்ளார். காவிரி நிர் தொடர்பாக எழுந்த பிரச்சனையில்,  கன்னட அமைப்பினர், தமிழர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்கள் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்படுகிறது. கர்நாடக எல்லையில் சென்ற தமிழகத்தை சேர்ந்த ஒரு வாகனத்தை வழிமறித்த கும்பல், அவர் முதியவர் என்றும் பாராமல் கன்னடம் பேசக்கூறி கன்னத்தில் அடித்தனர். …

Read More »

நதிகளை இணையுங்கள்.. சிவக்குமார் ஆவேசம்!

சென்னை: நதிகளை இணைத்து தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க அரசுகள் முன்வர வேண்டும். தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்காமல் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்டு என்ன புண்ணியம் என்று நடிகர் சிவக்குமார் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். காவிரி விவகாரம் பற்றி எரிகிறது. இந்த விவகாரம் குறித்து சிவக்குமார் அறிவுப்பூர்வமாக சில கருத்துக்களைக் கூறியுள்ளார். சிவக்குமாரின் கருத்து: தமிழ்நாடு முழுவதும் குடிக்க தண்ணீர் இல்லாமல் ஜனங்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். குடிப்பதற்கு மட்டுமில்லாமல், விவசாயத்துக்கே தண்ணீர் இல்லாததால் …

Read More »