Tuesday , November 21 2017
Home / முதன்மை செய்திகள் / சாம்பியன்ஸ் டிராபி: இலங்கையிடம் இந்தியா தோற்றது.

சாம்பியன்ஸ் டிராபி: இலங்கையிடம் இந்தியா தோற்றது.

லண்டன்  ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணியில் ரோகித் ஷர்மா, ஷிகார் தவான் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி 138 ரன் சேர்த்து வலுவான தொடக்கத்தை தந்த நிலையில், ரோகித் (78 ரன், 79 பந்து) மலிங்கா வேகத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் கோஹ்லி, பிரதீப் பந்தில் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். யுவராஜ் சிங் (7) குணரத்னே பந்தில் ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் விக்கெட் விழுவதை தடுத்து நிறுத்திய, தவான்-டோனி ஜோடி மீண்டும் ஆட்டத்தை அதிரடிக்கு கொண்டு சென்றது. தவான் 112 பந்தில் சதம் அடித்தார்.

மறுமுனையில் டோனி 46 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 82 ரன் சேர்த்த நிலையில், தவான் 125 ரன் எடுத்து, மலிங்கா பந்தில் ஆட்டமிழந்தார். டோனி 52 பந்தில் 63 ரன் எடுத்து வெளியேறினார்.

கடைசி கட்டத்தில் கேதார் ஜாதவ் அதிரடியாக ஆட, இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன் எடுத்தது. கேதார் ஜாதவ் 25 ரன் (13 பந்து), ஜடேஜா ரன் ஏதுமின்றி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

322 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி டிக்வெல்லா (7) விக்கெட்டை விரைவில் இழந்த போதிலும், குணதிலகா, மெண்டிஸ்  2வது விக்கெட்டுக்கு 159 ரன் சேர்த்த நிலையில், குணதிலகா (76 ரன்), மெண்டிஸ் (89 ரன்) இருவருமே துரதிஷ்டவசமாக ரன் அவுட்டாக, மீண்டும் இந்தியா பக்கம் வெற்றி திரும்பியது.

எனினும் அடுத்த வந்த வீரர்கள் பொறுப்புடன் ஆட இலங்கை 48.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 322 ரன் எடுத்து வென்றது. மேத்யூஸ் 45 பந்துகளை சந்தித்து 52 ரன் எடுத்தார். குணரத்னே 21 பந்தில் 34 ரன் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். பெரேரா 44 பந்தில் 47 ரன் எடுத்து ரிடையர்ட்ஹட் முறையில் வெளியேறினார்.

இந்திய தரப்பில் கேப்டன் கோஹ்லி உள்பட 7 பேர் பந்து வீசியும் புவனேஸ்குமார் மட்டும் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

Check Also

முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி விரதம்

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் முருகப் பெருமான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. சூரனுடன் போரிட்ட கந்தப் பெருமான் அவனை வதம் …