Tuesday , November 21 2017
Home / முதன்மை செய்திகள் / பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்!

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்!

விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணிமாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது.

பிடித்து வைத்தால் பிள்ளையார் என விநாயகரை போற்றுவார்கள். விநாயகர் அவ்வளவு எளிமையானவர்.

“மஞ்சளிலே செய்யினும், மண்ணினாலே செய்யினும் அஞ்செழுத்து மந்திரத்தை, நெஞ்சில் நாட்டும்பிள்ளையார் ” எனும் வரிகள் அவரின் எளிமையை விளக்குவதாகும். மஞ்சளில், மண்ணில், அரிசி மாவில், காகிதக்கூழில் என கூறிக்கொண்டே போகலாம். அவ்வளவு ஏன் ? பசுஞ்சாணத்தை பிள்ளையாராக வைத்து அருகம்புல் சாற்றிவிட்டால் ஓடி வந்துவிடுவார் நம் குறை தீர்க்க. எந்த ஒரு ஓவியராலும் ஓவியரல்லாதாரும் எளிதில் வரையக்கூடிய உருவம் நம் விநாயகரின் உருவம்தான். அவரை எப்படி வரைந்தாலும் பார்ப்பவர் கண்களை பொருத்து அழகாக காட்சியளிப்பார்.

ஓங்கார வடிவமாக விளங்கும் ஸ்ரீ விநாயகப் பெருமான் யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர். மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக் கூடியவர்.

வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள் எனக் கொண்டு வழிபாடு செய்வது காணாபத்தியம் எனும் வழிபாட்டு முறையாகும்.

ஸ்ரீ விநாயக மூர்த்தியை வழிபட பல்வேறு வழிபாடுகள் இருந்த போதிலும், விநாயக சதுர்த்தியும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடும் மிக மிக முக்கியமானது.

பிள்ளையார் பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்(5)

ஆற்றங்கரை ஓரத்திலும், அரசமர நிழலிலும்
வீற்றிருக்கும் பிள்ளையார், வினைகள் தீர்க்கும் பிள்ளையார்(2)

ஆறுமுக வேலனுக்கு, அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும், நீக்கி வைக்கும் பிள்ளையார்(2)

மஞ்சளிலே செய்யினும், மண்ணினாலே செய்யினும்
அஞ்செழுத்து மந்திரத்தை, நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்(2)

ஓம்  நமச்சிவாய என்ற அஞ்செழுத்து மந்திரத்தை

நெஞ்சில் நாட்டும் பிள்ளையார், பெருமை வாய்ந்தபிள்ளையார்(2)

அவல் கடலை சுண்டலும் அரிசிக் கொளுக்கட்டையும்
கவலையின்றி உண்ணுவார் கண்ணை மூடித் தூங்குவார்(2)

கலியுகத்தின் விந்தைகளைக், காணவேண்டி அனுதினமும்
எலியின் மீது ஏறியே இஷ்டம் போலச் சுற்றுவார்.(2)

Check Also

முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி விரதம்

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் முருகப் பெருமான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. சூரனுடன் போரிட்ட கந்தப் பெருமான் அவனை வதம் …