Tuesday , November 21 2017
Home / உலகம் / சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய Google இன் Allo App

சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய Google இன் Allo App

பல குறுந்தகவல் செயலிகள் மத்தியில் புதிதாக Allo App என்ற செயலி அறிமுகமாகின்றது. 

google-allo-site

தங்களின் கையடக்கத்தொலைபேசி இலக்கத்தினை கொண்டு இதற்கு பதிவு செய்தால் கூகுள் கணக்குடன் இணைத்து மற்ற குறுந்தகவல் செயலி வழங்கும் அனைத்து அம்சங்களையும் Allo App வழங்குகின்றது.

கூகுளின் குறுந்தகவல் அனுப்பும் இந்த Allo App, இப்போதே பதிவிறக்குவது மிகவும் மதிப்புள்ளதாகும். Facebook, Messenger உடன் bots-ஐ ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், Facebook விட மிக அதிக பயனுள்ள bot-ஐப் பயன்படுத்தி, Google ஒரு குறுந்தகவல் App-ஐ வடிவமைத்துள்ளது.

Allo – மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு, இப்போது பதிவிறக்கத்திற்கு தயாராக இருக்கின்றது.

பல சுவாரஸ்யமான அம்சங்களுடன், குழு கலந்துரையாடல், ஸ்டிக்கர்ஸ், செய்திகள் காலாவதியாகும் ஒரு ஆப்ஷனுடன் இந்த App தயாராகியுள்ளது. ஆனால், இதில் காணொளி மற்றும் ஒலி  அழைப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது.

Google தனது இந்த App-ஐ, ‘smart messaging app’ என்கிறது. ஏனெனில், நீங்கள் செய்தியனுப்புவதிலிருந்து, நீங்கள் அனுப்ப இருக்கும் வார்த்தைகளை அது கற்றுக்கொள்கிறது.

மேலும், இதில் செய்திகளை மிகவும் ரகசியமானதாக்கலாம் மற்றும் உங்களுக்கு எப்பொழுது அது அழிக்கப்படவேண்டுமோ, அந்த நேரத்தை அழிக்கவும் செய்யலாம். snapchat -ஐப் போலவே, புகைப்படங்களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்புவதற்கு முன்பு, அதன் மேல் நீங்கள் எதையாவது எழுதி அனுப்பமுடியும்.

மேலும், செய்திகளை அனுப்பும்போது கூகுள் செய்வதற்கான வசதியும்,App-இன் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : வீரகேசரி

Check Also

முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி விரதம்

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் முருகப் பெருமான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. சூரனுடன் போரிட்ட கந்தப் பெருமான் அவனை வதம் …