Saturday , February 24 2018
Home / உலகம் / ‘வலம்புரி’ கிடைத்தது.

‘வலம்புரி’ கிடைத்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளால்,1998ஆம் ஆண்டு தற்கொலைத் தாக்குதலுக்கு இலக்காகி, பருத்தித்துறைக் கடலில் மூழ்கிய, கடற்படையினருக்குச் சொந்தமான ‘வலம்புரி’ என்ற கப்பல்,கடற்படை நீர்மூழ்கி வீரர்களால் திங்கட்கிழமை (03) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

sl-navy

பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட குறித்த கப்பலில், கடற்படையினர் 20 பேர் பயணித்துக்கொண்டிருந்த போதே, விடுதலை புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு இலக்கானது. இதன்போது, அதில் அவர்கள் அனைவரும் உயிரிழந்திருந்தனர். யுத்தம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, குறித்த கப்பலை தேடுவதில் கடற்படையினர் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

இந்நிலையில், கடற்படை நீர்மூழ்கி வீரர்கள் எட்டுப்பேர், கடந்த திங்கட்கிழமை மேற்கொண்ட தேடுதலின் பின்னர், இந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பலின் சிதைவடைந்த பாகங்கள், கடலின் அடிப்பகுதியில் உள்ளதாக அறிவித்துள்ள கடற்படை, கப்பலின் ஐந்தில் ஒருபகுதி, கடலுக்குள் மணலில் புதையுண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Check Also

விவேகானந்தரின் சிந்தனை துளிகளில் சில…!

சமநிலையில் இருந்து பிறழாதவன், மன சாந்தமுடையவன், இரக்கமும், கருணையும் கொண்டவன் ஆகியோர் நல்ல பணிகளை மட்டும் வாழ்வில் செய்ய முற்படுவர். அதன்மூலம் …