Saturday , February 24 2018
Home / முதன்மை செய்திகள் / பிரிட்டனின் பவுண்டின் மதிப்பு சரிந்துள்ளது.

பிரிட்டனின் பவுண்டின் மதிப்பு சரிந்துள்ளது.

ஆசிய சந்தைகளில், ”பிளாஷ் கிராஷ்”(flash crash) என்று அறியப்படும், பங்கு சந்தையில் தி்டீரென ஏற்படும் பெரிய வீழ்ச்சியால், பிரிட்டனின் நாணயமான பவுண்டின் மதிப்பு சரிந்துள்ளது.

pound-euro-dollar

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக வாக்களித்ததற்குப் பிறகு பவுண்டு மதிப்பு குறைந்து வரும் போக்கில், இதுதான் மிகப் பெரிய சரிவாகும்.

ஒரு கட்டத்தில், டாலரின் மதிப்பிற்கு எதிராக, பவுண்டின் மதிப்பு கிட்டத்தட்ட 10 சதவீதம் என்ற அளவில் வீழ்ச்சி அடைந்தது. சரிவில் இருந்து மீள்வதற்கு முன் யூரோ பண மதிப்பிற்குக் எதிராகவும் சரிந்தது.

பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகத் தயாராவதால், அதனோடு உள்ள பேச்சுவார்த்தைகளில் கண்டிப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஒல்லாந்த் கூறியதைத் தொடர்ந்து இந்தச் சரிவு தொடங்கியது.

Check Also

விவேகானந்தரின் சிந்தனை துளிகளில் சில…!

சமநிலையில் இருந்து பிறழாதவன், மன சாந்தமுடையவன், இரக்கமும், கருணையும் கொண்டவன் ஆகியோர் நல்ல பணிகளை மட்டும் வாழ்வில் செய்ய முற்படுவர். அதன்மூலம் …