Tuesday , November 21 2017
Home / முதன்மை செய்திகள் / அபுதாபி – திருச்சி இடையே விமானப் போக்குவரத்து.

அபுதாபி – திருச்சி இடையே விமானப் போக்குவரத்து.

அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபி மற்றும் திருச்சி இடையே நேரடி விமானப் போக்குவரத்தை தொடங்கவுள்ளது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்.

jetairways

அடுத்தாண்டு (2017) பிப்ரவரி 1-ம் தேதி முதல் தினசரி இரவு 9.10-க்கு அபுதாபியிலிருந்து புறப்படும் ஜெட் ஏர்வேஸ் விமானம் மறுநாள் அதிகாலை 3.10-க்கு திருச்சி வந்தடையும்.

பின்னர் பயணிகளை இறக்கி, ஏற்றிக்கொண்டு மீண்டும் இங்கிருந்து அதிகாலை 4.10-க்கு புறப்பட்டு காலை 7.10-க்கு அபுதாபி சென்றடைகிறது.

இதன்மூலம் காலை புறப்படும் நபர்கள் அன்றைய தினமே பணிக்குச் செல்லவும், அதே போல பணி முடிந்து அன்றைய தினம் இரவே புறப்பட்டு தமிழகம் வந்து சேரவும் முடியும். அதற்கேற்ற வகையில் விமான நேரம் அமைந்திருப்பது பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. வளைகுடா நாடுகளில் துபையைத் தொடர்ந்து தற்போது அபுதாபிக்கும் விமானப் போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அரபு நாட்டு நிறுவனமான எத்திஹாடு நிறுவனத்துடன் இணைந்து இதை செயல்படுத்தியுள்ளது. இந்த புதிய போக்குவரத்து திருச்சி விமான நிலையத்தை, பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தில் மேலும் மேம்படுத்தும்.

நன்றி: தினமணி

 

Check Also

முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி விரதம்

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் முருகப் பெருமான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. சூரனுடன் போரிட்ட கந்தப் பெருமான் அவனை வதம் …